கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரங்களால் மின்னும் சிங்கப்பூர் ரயில் மற்றும் பேருந்துகள்..!

MRT trains, buses get tropical Christmas makeover

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு MRT ரயில்கள் மற்றும் பேருந்துகள் அலங்கரிக்கப்பட்டு வண்ணக்கோலங்களால் மின்னுகின்றன.

தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA), SBS Transit, SMRT ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

“வெப்பமண்டல கடற்கரை கிறிஸ்துமஸ்” என்ற கருப்பொருள் கொண்டு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் அமைந்துள்ளன. இதில் வெப்பமண்டல கூறுகளான மணல், நட்சத்திர மீன், பனை மரங்கள், போன்ற படங்கள் ரயில்களிலும் பேருந்துகளிலும் இடம்பெற்றுள்ளன.

“இவை அனைத்தும் பயணிகளின் பொது போக்குவரத்து அனுபவத்தை மேம்படுத்துவதோடு, கிறிஸ்துமஸ் விடுமுறையின் உற்சாகத்தை பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று LTA ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இந்த அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் ரயில்கள் ஐந்து MRT பாதைகளிலும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5, 7, 14, 61, 65, 197, 857, 972 ஆகிய பேருந்துச் சேவைகளிலும் அலங்காரங்களைக் கண்டு நீங்கள் ரசிக்கலாம்.

கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட MRT நிலையங்களும், டோபி காட் நிலையம் உட்பட இதில் அலங்கரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.