சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு பெண்..

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில்
(PHOTO : Shutterstock)

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில் ஈடுபட்டு தண்டனை பெற்றுவந்த மலேசியப் பெண், மீண்டும் திருடியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு முதல் திருட்டில் ஈடுபட்டு வரும் 75 வயதான அந்த பெண்மணிக்கு நவ.1 ஆம் தேதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை

முதலில் 1971 ஆம் ஆண்டு திருட்டில் ஈடுபட்ட இங் கிம் ஸ்வீ என்ற அவருக்கு அப்போது அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் 2004 ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் தடுப்பு காவலில் அவர் வைக்கப்பட்டார். மேலும் பலமுறை தண்டனை பெற்று அவர் சிறையிலும் இருந்துள்ளார் என ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

கூடுதலாக அவர் மலேசியாவில் 1977, 1985, 1987, 2015, 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருட்டு மற்றும் உடைப்புக் குற்றங்களுக்காகவும் தண்டனை பெற்றதாக CNA தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் உள்ள இடங்களில் திறந்திருக்கும் கைப்பைகள் தான் அவரின் இலக்கு, அதே போல சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை குறிவைத்து அவர் திருட்டில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த திருட்டு குறித்து அந்த பெண் கூறுகையில்; அவர் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் இதனால் பணக்காரர்களிடம் இருந்து இரவல் பெற்று தன்னை காப்பாற்றி கொள்வது போல உணர்வதாகவும் கூறியுள்ளார்.

வெறும் S$1 கொடுத்து S$56 லட்ச வெள்ளியை தட்டிச்சென்ற நபர் – முழுத்தொகையும் அவருக்கே