பாம்புகள், உடும்புகள்… அதிர்ந்த அதிகாரிகள்… சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு! 

Photo Credit: ANI

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தங்கம், போதைப்பொருள், அரிய வகை உயிரினங்கள் ஆகியவைக் கடத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால், சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது, பயணிகளிடமும், வெளிநாடுகளில் இருந்து சரக்குகளைப் பிரித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசை – பயணிகள் கடும் அவதி

அந்த வகையில், இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் (Mumbai International Airport) வெளிநாடுகளில் இருந்து வந்த மீன்கள் அடங்கிய சரக்குகளில்  மலைப்பாம்புகள், ஆமைகள், உள்ளிட்டவைக் கடத்தப்படுவதாக மும்பையில் உள்ள மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு (Directorate of Revenue Intelligence) தகவல் வந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், கடந்த வியாழன்கிழமை அன்று மும்பை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இறக்குமதி செய்யப்பட்டு, சரக்கு குடோன்களில் வைக்கப்பட்டிருந்த மீன் பெட்டிகளைத் திறந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அதில், 100- க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள், நட்சத்திர ஆமைகள், உடும்புகள் என 665 உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் 500- க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உயிருடன் இருந்த நிலையில், 100- க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இறந்த நிலையில் இருந்தனர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம்- விரிவான தகவல்!

இது குறித்து வனத்துறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்த நிலையில், அவர்களிடம் அவை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனர அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த அரிய வகை உயிரினங்கள் மலேசியாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சரக்குகளை இறக்குமதி செய்த நபரும், அதை டெலிவரி செய்ய வேண்டிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இவை அனைத்தும் அரிய அல்லது அழிந்து வரும் உயிரினங்கள் என்று கூறிய அதிகாரிகள், உரிய அனுமதியின்றிக் கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறினர்.