“சொர்க்கத்தில் சென்று விளையாடு” – தாயின் உருக்கமான இறுதி வார்த்தைகள்; இரக்கமற்ற Covid-19-ஆல் மரணித்த குழந்தை

Mom Love pc- mothership

சிங்கப்பூரில் Raisya Ufairah Mohammed Ashraff என்ற நான்கு வயது குழந்தை கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜூலை 17 அன்று உயிரிழந்தது.தொற்று உறுதி செய்யப்பட்ட அதே நாளில் பச்சிளம் குழந்தையின் உயிர் பிரிந்தது.சிங்கப்பூரில் கோவிட்-19 நோயால் இறந்த 12 வயதுக்குள் இருக்கும் இரண்டாவது குழந்தை Raisya ஆவார்.

குழந்தையின் 39 வயதான தாய் மார்டலினாவிடம் குழந்தையின் மரணத்தை மருத்துவர்கள் உறுதிபடுத்தியப் பின்னர், சில இறுதி வார்த்தைகளைக் குழந்தையிடம் கூறியுள்ளார்.தாய் மார்டலினா தனது இளைய குழந்தை ரைசியாவிடம் ” நீ நிரந்தரமாய் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டாய் என்பதை அம்மா ஏற்றுக்கொள்கிறேன்.சொர்க்கத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் சென்று விளையாடு ” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

குழந்தையின் வீட்டு உதவியாளருக்கு ஜூலை 13 அன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனே,அவரது சொந்த அறையில் தனிமைப்படுத்திக் கொண்டார்.இரண்டு நாட்களுக்கு பிறகு ரைசியாவிடம் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.ஜூலை 15 அன்று அறிகுறிகள் தென்பட்ட உடனே,சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கோவிட்-19 இல்லை என்று முடிவு வந்தது.

ஜூலை 17 அன்று குழந்தையின் உடல்நிலை மோசமானதால் ,மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாய் மார்டலினா முயற்சி செய்தார்.இருப்பினும் காரில் குழந்தை சுயநினைவை இழந்தது.மருத்துவமனையில் அனுமதித்து 2 மணி நேரத்திற்கு பின்னர் அவரது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.