புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தின் அலுவலகத்திற்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள்!

புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தின் அலுவலகத்திற்கு வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள்!
Photo: Migrant Workers' Centre

 

சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, உடை, பாதுகாப்பு உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre- ‘MWC’). இது ஒரு அரசுசாரா அமைப்பு ஆகும். ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், தொழிலாளர்கள் தினம் உள்ளிட்ட விழா நாட்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம்.

தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேசிய இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர்!

சிங்கப்பூரில் வசித்து வரும் பெரும்பணக்காரர்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையத்துடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை இன்ப முகத்துடன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள சூன் லீ சாலையில் (Soon Lee Road) அமைந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தின் தலைமை அலுவலகத்திற்கு ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சுமார் 20 மாணவ, மாணவிகள் வருகைத் தந்தனர். அவர்களை வரவேற்ற ‘MWC’ நிர்வாகிகள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட சவால்களையும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘MWC’ செய்த உதவிகள் குறித்தும் விளக்கினர்.

சரக்குகளை ஏற்றி சென்ற லாரி… ஓட்டுனருக்கு திடீரென பக்கவாதம்

பின்னர், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ‘MWC’ அலுவலகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.