தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேசிய இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர்!

தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேசிய இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர்!
Photo: TN Govt

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று (ஜூலை 03) காலை 11.00 மணிக்கு இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டுத் தூதர் சைமன் வோங் நேரில் சந்தித்துப் பேசினார்.

வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது வர்த்தகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து முதலமைச்சர் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச பிளாஸ்டிக் பைகளுக்கு குட் பை.. இனி கட்டணம் – ஜூலை 3 முதல் நடப்பு

இந்த நிகழ்வின் போது, தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி,ஆர்.பி.ராஜா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., சென்னையில் உள்ள சிங்கப்பூர் நாட்டின் துணைத் தூதர் எட்கர் பாங், செயலாளர் (அரசியல்) வு போ செங் (Wu Po Cheng), துணைத் தூதர் (அரசியல்) பாசில் டிங், மண்டல இயக்குநர் டினைஸ் டான் (Denise Tan) மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.