‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை

Nagaenthran Dharmalingam drug case singapore
Reuters

சிங்கப்பூருக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலேசியரின் வழக்கறிஞர் நேற்று செவ்வாயன்று (மார்ச் 1) தனது மேல்முறையீட்டின் போது நீதிபதிகளிடம் கருணை கோரினார்.

மேலும், அவரது மனநலக் குறைபாட்டை நிரூபிக்க வேண்டி மனநல மதிப்பீட்டை கூடுதலாக பெறுவதற்காக அதிக அவகாசம் கேட்டார்.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் சட்டங்களைக் கொண்டுள்ள நாடு சிங்கப்பூர்.

42 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக நாகேந்திரன் தர்மலிங்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மனநலம் குன்றியதாக கூறி மேல்முறையீடு செய்துள்ளார் அவரின் வழக்கறிஞர்.

அவரது வழக்கறிஞர் வயலட் நெட்டோ, அவரின் மனநல மதிப்பீட்டை வழங்க கால அவகாசம் அனுமதிப்பதில் நீதிபதிகளிடம் “கருணை” கோரினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்.

வழக்கு தொடர்பாக மேலும் படிக்க : https://sg.tamilmicset.com/நாகேந்திரன்

வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!