பசுமையான சிங்கப்பூரை உருவாக்கும் இயக்கம் – பருவநிலை மாற்றங்களை சமாளிக்க மில்லியன் மரங்கள் நடுவதற்கு இலக்கு !

Tree planting

சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் புதிதாக ஒரு மில்லியன் மரங்களை நட வேண்டும் என்ற இலக்கோடு ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.இது வரை சுமார் நான்கு லட்சம் மரக்கன்றுகள் அந்த இயக்கத்தின்கீழ் நடப்பட்டு இருக்கின்றன.தொழிற்சாலைகள்,கல்விக்கூடங்கள்,குடியிருப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் அவை வளர்ந்து வருகின்றன.மரக்கன்றுகளை முறையாக நடுவதற்கு 61,000-க்கும் மேற்பட்டோர் உதவியிருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மன்ட் லீ ஆகஸ்ட் 20 அன்று தெரிவித்தார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.மேலும் 2020-ஆம் ஆண்டில் மில்லியன் மரங்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.சிங்கப்பூரை பசுமைவள நகராக மாற்றுவதற்கான முயற்சிகளை இந்த இயக்கம் மேற்கொள்கிறது.பசுமையான சிங்கப்பூரை உருவாக்குவதற்கான முக்கிய அங்கமாக இயக்கம் திகழ்வதாகவும் லீ சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரின் பருவநிலை நெருக்கடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பசுமை வளத்தைப் பெருக்க மில்லியன் மரங்கள் இயக்கத்தை தேசிய பூங்காக் கழகம் தொடங்கியது.