கோலாகலக் கொண்டாட்டங்களுடன் நிறைவடைந்த 56- வது தேசிய தின அணி வகுப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

சிங்கப்பூரில் 56- வது தேசிய தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 9- ஆம் தேதி மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு நடைபெற்றது.

நாட்டில் கிருமித்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மரினா பேயில் பார்வையாளர்கள் இல்லாமல் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு சிறிய அளவில் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 9- ஆம் தேதி நடைபெற்ற தேசிய தின சடங்கு பூர்வ அணிவகுப்பில் சுமார் 600 பேர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப, அணி வகுப்பில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 70 விழுக்காடு குறைக்கப்பட்டது.

தேசிய தினம் 2021: சிங்கப்பூரில் நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட வாணவேடிக்கை.! (காணொளி)

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 9- ஆம் தேதி நடைபெறவிருந்த 56- வது தேசிய தின கொண்டாட்டங்கள், தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் நேற்று (21/08/2021) தேசிய தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. கலை நிகழ்ச்சிகள், கண்கவர் வணவேடிக்கையுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. குறிப்பாக, நாட்டின் பலத்தை உலகிற்கு பறைச்சாற்றும் வகையில் வீரர்களின் பல்வேறு ஊர்திகளும் இடம் பெற்றிருந்தனர். மேலும், முப்படை வீரர்களின் மிடுக்கான அணி வகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

மரினா பேவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியன் லூங், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆர்ச்சர்ட் சாலையில் புகைப்பிடித்து பிடிபட்ட நபர் அதிகாரிகளிடம் வாக்குவாதம்! (காணொளி)

ஆனால், இந்த ஆண்டு அணிவகுப்பு நடைபெற்ற மரினா பே மிதக்கும் மேடையை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு வாணவேடிக்கைகளின் பிரம்மாண்டத்துக்குக் குறைவில்லை.

வீரர்களின் வான் சாகசங்கள் பொதுமக்களைக் கவர்ந்தது. கலை நிகழ்ச்சியில் முதல்முறையாக மிகை மெய்நிகர் தொழில்நுட்பமும், முழு உயிரோவியப் படைப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த படியே தேசிய தின கொண்டாட்டங்களைப் பார்க்கும் வகையில், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூ-டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தேசிய தின அணி வகுப்பு காரணமாக, நேற்று சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

இந்த கொண்டாட்டங்களானது முழுக்க முழுக்க அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.