தேசிய தினம் 2021: சாங்கி விமான நிலையம் வெளியிட்ட பிரத்தியேக காணொளி.!

National day Changi airport
Pic: @changiairport

சிங்கப்பூரில் 56 வது தேசிய தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, நாட்டில் கிருமித்தொற்று பரவல் காரணமாக தேசிய தின கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

56 வது தேசிய தினத்தை முன்னிட்டு, இன்று காலை 9 மணியளவில் Float@Marina Bay-ல் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு நடைபெற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மரினா பேயில் பார்வையாளர்கள் இல்லாமல் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு சிறிய அளவில் நடத்தப்பட்டது.

சிங்கப்பூர் மரினா பேயில் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு.! (காணொளி)

இந்நிலையில், சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு சாங்கி விமான நிலையம் அதன் சிறப்பம்சங்களை குறிக்கும் விதமாக பிரத்தியேக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிங்கப்பூர் தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளையில், ​​இந்த காணொளியை சிங்கப்பூர் மக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவர்கள் சாங்கி விமான நிலையத்தை ஒவ்வொரு முறை தொடும்போதும் இது அவர்களின் வீடு என்ற எண்ணத்தை பெறுகின்றனர் என்றும், நாம் அனைவரும் விரைவில் இதை மீண்டும் அனுபவிக்கலாம் என்றும் சாங்கி விமான நிலையம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு புதுப் பெயர்.. தலையசைத்த அதிகாரிகள்.. நிபந்தனை விதித்த ஜப்பான்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு