தேசிய தின அணிவகுப்பு ஒத்திகை- பேருந்துச் சேவைகள் தொடர்பாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

Photo: SBS Bus Wikipedia

சிங்கப்பூரில் உள்ள முக்கிய பொதுப்போக்குவரத்து நிறுவனங்களின் ஒன்றான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஜூலை 23- ஆம் தேதி சனிக்கிழமை அன்று சில சாலைகளில் தேசிய தின அணிவகுப்பு (National Day Parade 2022) ஒத்திகை நடைபெறுவதால், அன்றைய தினம் மட்டும் காலை 07.30 AM மணி முதல் நள்ளிரவு 11.00 PM மணி வரை சில பேருந்துச் சேவைகள் மாற்று பாதையில் இயக்கப்படும்.

மீண்டும் வருகிறது நடன இசைத் திருவிழாவான ZoukOut – 30,000 பேர் வரை கூடலாம் என கணிப்பு !

10, 14, 16, 56, 57, 70/70M, 100, 111, 130, 131, 133, 162M, 195, 196, 502 ஆகிய 15 பேருந்துச் சேவைகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த பேருந்துச் சேவைகள் பேஃபிரண்ட் அவென்யூ (Bayfront Avenue), பீச் ரோடு (Beach Road), பிராஸ் பாஸா ரோடு (Bras Basah Road), காலியர் கீ (Collyer Quay), ஃபுல்லர்டன் ரோடு (Fullerton Road), ராஃபிள்ஸ் அவென்யூ (Raffles Avenue), ராபின்சன் ரோடு (Robinson Road) உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களை இந்த பேருந்துகள் தவிர்க்கும்.

பிரதமர் மோடிக்கு கடிதம் – சிங்கப்பூர் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்க ஏன் தாமதம் ? ஆத்திரமடைந்த முதல்வர் அரவிந்த்

எனவே, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 1800-287-2727 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், www.sbstransit.com.sg என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தையும் அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.