தேசிய தின அணி வகுப்பு ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Photo: Ministry Of Defence

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18- ஆம் தேதி வரை இரண்டாம் கட்டம் Phase 2 (Heightened Alert) அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று (22/07/2021) நண்பகல் நிலவரப்படி மொத்தம் 162 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 பேர் ஜுராங் ஃபிஷர் போர்ட் கிளஸ்டருடன் (Jurong Fishery Port cluster) தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நடக்க முடியாத முதியவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று மருத்துவமனை செவிலியர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றன.

உணவகத்தில் இருந்து உயிருடன் நண்டுகளைத் திருடிய நபருக்கு சிறை!

இந்த நிலையில் ஆகஸ்ட் 9- ஆம் நடைபெறவிருந்த தேசிய தின அணி வகுப்பு (National Day Parade) ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், பிரதமர் லீ சியன் லூங் தனது தேசிய தின பேரணி உரையை (National Day Rally) ஆகஸ்ட் 29- ஆம் தேதி அன்று நிகழ்த்துவார். இந்த நிகழ்வு, 1 ஸ்டார்ஸ் அவென்யூவில் உள்ள மீடியா கார்ப் (Mediacorp at 1 Stars Avenue) அலுவலகத்தில் நடைபெற்று என்று பிரதமர் அலுவலகம் (Prime Minister Office) நேற்று (22/07/2021) தெரிவித்தது.

ஜூலை 24-ஆம் தேதியும், ஜூலை 31- ஆம் தேதியும் நடைபெறவிருந்த தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையும், முன்னோட்டக் காட்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேசிய ஆவணக் காப்பகத்தின் படி (National Archives), கடந்த ஆண்டைத் தவிர, 1966- ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தின அணி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, பிரதமர் லீ சியன் லூங் தேசிய தின அணி வகுப்பு உரைக்கு பதிலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் தேசிய தினமான (National Day Of Singapore) ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று, தேசிய தின அணி வகுப்பு (National Day Parade), பிரதமரின் தேசிய தின உரை (Address By The Prime Minister Of Singapore), கண்கவர் வாணவேடிக்கை (Fireworks) உள்ளிட்டவை இடம் பெறும். ஆனால் தற்போது, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.