தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நேரில் காண விரும்புபவர்களின் கவனத்திற்கு- வெளியானது முக்கிய அறிவிப்பு!

தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நேரில் காண விரும்புபவர்களின் கவனத்திற்கு- வெளியானது முக்கிய அறிவிப்பு!
Photo: NDPeeps/Facebook

 

வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் தேசிய தினம் (National Day Of Singapore) கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பாடாங்கில் (Padang) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை நேரில் காண விரும்புபவர்கள் வரும் மே 29- ஆம் தேதி அன்று மதியம் முதல் https://www.ndp.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 12- ஆம் தேதி நண்பகல் வரை மட்டுமே. அதற்கு பிறகு விண்ணப்பம் செய்யும் நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதைத் தொடர்ந்து, மின்னணு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு வரும் ஜூன் 23- ஆம் தேதி முதல் ஜூன் 28- ஆம் தேதி வரை ndp2023@hapz.com என்ற மின்னஞ்சல் முகவரியில் நுழைவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் மட்டுமே நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல், ஜூலை 22, ஜூலை 29- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பு முன்னோட்ட நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணலாம். எனினும், அவர்களும் விண்ணப்பித்து நுழைவுச் சீட்டைப் பெற்றிருக்க வேண்டும். சுமார் 27,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருவதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்

அதேபோல், வரும் ஆகஸ்ட் 5, 6 ஆம் தேதிகளில் ஹார்ட்லேண்ட்ஸ் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாணவேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.