பிரதமரின் தேசிய தின உரை வரும் ஆகஸ்ட் 8-ல் ஒளிபரப்பாகும்!

PM Lee congratulates Aung San Suu Kyi
PM Lee congratulates Aung San Suu Kyi (PHOTO: Yahoo)

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் 22- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18- ஆம் தேதி வரை இரண்டாம் கட்டம் Phase 2 (Heightened Alert) அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வரும் ஆகஸ்ட் 9- ஆம் நடைபெறவிருந்த 56 வது தேசிய தின கொண்டாட்டங்கள், தேசிய தின அணி வகுப்பு (National Day Parade) வரும் ஆகஸ்ட் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் (Ministry Of Defence) அறிவித்திருந்தது.

அதிபர் கமலா ஹாரிஸின் வருகை வரவேற்கத்தக்கது – பிரதமர் திரு. லீ!

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி அன்று பிரதமர் லீ சியன் லூங்-கின் தேசிய தின உரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உரையை மற்ற அமைச்சர்கள், மற்ற அலுவல் மொழிகளில் வழங்குவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியெட் (Deputy Prime Minister Heng Swee Keat) மாண்டரின் (Mandarin) மொழியிலும், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சர் மசாகோஸ் ஸூல்கிஃப்லி (Minister for Social and Family Development Masagos Zulkifli) மலாய் (Malay) மொழியிலும், போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் (Minister for Transport S Iswaran) தமிழிலும் (Tamil) பேசுவார்கள்.

பிரதமரின் தேசிய தின உரையின் முதல் ஒளிபரப்பு (First Broadcast), ஆங்கிலத்தில், வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி அன்று மாலை 06.45 PM மணிக்கு சிஎன்ஏவில் (CNA) ஒளிபரப்பப்படும் என்று பிரதமர் அலுவலகம் நேற்று (04/08/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் ‘கடல் சிக்கன்’ என்னும் பலூன் மீன்!

அதைத் தொடர்ந்து ‘Suria’-னில் ஒளிவழியில் மலாய் உரையும் (Malay broadcast on Suria), வசந்தம் ஒளிவழியில் (Tamil broadcast on Vasantham) தமிழ் உரையும் இடம் பெறுகிறது. ஒலி 968 (Oli 968) என்ற வானொலியில் தமிழ் உரையும், சேனல் 8 ஒளிவழியிலும் (Mandarin broadcast on Channel 8) மற்றும் கேபிடல் 958 (Capital 958) என்ற வானொலியில் மாண்டரி மொழியிலும் உரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் (PMO’s Official Website) மற்றும் யூடியூப் சேனலில் (YouTube Channel) நான்கு மொழிகளில் பிரதமரின் உரை பதிவேற்றம் செய்யப்படும். தேசிய தினத்தையொட்டி, ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று அணி வகுப்பு சடங்கு நடைபெறுகிறது.