தேசிய தின பேரணி உரையாற்றுகிறார் பிரதமர் லீ சியன் லூங்!

This solidarity and perseverance in times of adversity defines our Singapore spirit - PM Lee
PHOTO: Ministry of Communications and Information

 

 

வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் தேசிய தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் வலிமை பறைச்சாற்றும் வகையில், ராணுவம், விமானம் என முப்படையினரின் பேரணியும், வான் சாகச நிகழ்ச்சியும், மாணவர், மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

தகாத காட்சிகளை படம் பிடித்த ஆடவர்.. துரத்தி மடக்கி பிடித்த பொதுமக்கள் – போலீசிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் ஆகஸ்ட் மாதம் 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரின் அங் மோ கியோவில் (Ang Mo Kio) உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (Institute of Technical Education- ‘ITE’) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தேசிய தின பேரணி உரையை (National Day Rally) ஆற்றுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வேலையில் பிரஷர் தாங்கல..” – தப்பித்து காட்டுக்குள் சென்று 6 நாள் வாழ்ந்த வெளிநாட்டு ஊழியர்: பசி எடுத்ததும் அவசர எண்ணை அழைத்த சோகம்

பிரதமரின் தேசிய தின பேரணி உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022- ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய தின பேரணி உரையில், ஆண்களுக்கு இடையிலான பாலுறைவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப்பிரிவு ரத்துச் செய்யப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.