“தேசிய தின பேரணி உரையில் கலந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு”- அழைப்பு விடுத்த சிங்கப்பூர் பிரதமர்!

"தேசிய தின பேரணி உரையில் கலந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு"- அழைப்பு விடுத்த சிங்கப்பூர் பிரதமர்!
Photo: Singapore Prime Minister

 

 

சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 9- ஆம் தேதி தேசிய தினம் (National Day Celebrations 2023) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் (ITE College Central) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், தேசிய தின பேரணி உரையை (National Day Rally) ஆற்றவிருக்கிறார்.

“வெளிநாட்டு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்லக் கூடாது” – மீண்டும் சூடு பிடிக்கும் விவாதம்

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள தேசிய தின பேரணி உரை நிகழ்ச்சியில் நீங்கள் நேரில் கலந்து கொள்ள விருப்பமா? பின்வரும் கேள்விக்கான உங்கள் பதிலை எங்களுக்கு அனுப்பவும்,

சிங்கப்பூரராக இருப்பதில் நீங்கள் பெருமைப்படக்கூடிய ஒன்று எது? இந்த கேள்விக்கான பதிலை சிங்கப்பூரர்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் #InviteMeToNDR என்ற ஹேஷ்டேக்கைக் குறிப்பிட்டு, பிரதமரை டேக் செய்து பதிவிடலாம். அத்துடன், புகைப்படத்தைப் பயன்படுத்தியும் எழுதலாம். அதைத் தொடர்ந்து, go.gov.sg/invitemetoNDR2023 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று, பெயர், முகவரி, தொலைபேசி எண், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுச் செய்த லிங்க் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட வேண்டும்.

ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோவிலில் அன்னதானம் வாங்க சென்றபோது தகராறு.. ஆடவருக்கு சிறை

இதற்கான விண்ணப்பத்தைச் சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 23- ஆம் தேதி ஆகும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிங்கப்பூரர்கள், பிரதமரின் சமூக ஊடக விருந்தினர்களாக, தேசிய தின பேரணிக்கு உரைக்கு அழைக்கப்படுவர். உங்களின் பதிலை எதிர் நோக்கி இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.