சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள் பணியின்போது இறப்பு

national-servicemen-deaths 20-years
Fiona Tan

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் அடிப்படையில் மொத்தம் 42 தேசிய சேவையாளர்கள் (NSmen) பணியின்போது இறந்துள்ளனர்.

அவர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் (SAF), சிங்கப்பூர்க் காவல் படை (SPF) மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆகியவற்றில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!

அந்த எண்ணிக்கையில், 35 பேர் SAF அதிகாரிகள், நான்கு பேர் SPF அதிகாரிகள் மற்றும் மூன்று பேர் SCDF அதிகாரிகள் என்பது கூடுதல் தகவல்.

மேற்கண்ட புள்ளி விவரங்களை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்தார்.

அதில் ஆறு பேர், வேலைக்குச் செல்லும் அல்லது வரும் வழியில் அல்லது பணியின்போது, போக்குவரத்து விபத்துக்கள் மரணித்ததாக இங் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 52 பேருக்கு மூளை, முதுகுத் தண்டு, கண்கள் அல்லது மூட்டுகளில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டகாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கையில் 11 சம்பவங்கள் போக்குவரத்து விபத்துகளின் விளைவாக ஏற்பட்டவையாகும்.

வெளிநாட்டு ஊழியர்கள், விடுதிகளுக்கு பணியாற்றும் MOM அதிகாரி… சிறுமியிடம் சில்மிஷ வேலை – பிடித்து சிறையில் அடைத்த போலீஸ்