குளிக்கும்போது வீடியோ எடுத்த பல்கலைக்கழக மாணவருக்கு சிறைத் தண்டனை!

 

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (National University of Singapore- ‘NUS’). இந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ (Jonathan Angga Dharmawan Jie). இந்த மாணவருக்கு வயது 25. இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28- ஆம் தேதி அன்று அதிகாலை 12.30 AM மணியளவில் 25 வயதான பெண் ஒருவர் வளாகத்தில் உள்ள குடியிருப்பு நிலையத்தில் குளிப்பதை உணர்ந்து, அதை வீடியோ எடுக்க முடிவு செய்தார்.

பின்னர், அந்த மாணவர் தனது மொபைல் தொலைபேசியை குளியறைக் கதவின் அடிப்பகுதியில் உள்ள லூவர்களுக்கு (louvres) இடையில் வைத்து இரண்டு வீடியோக்களை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து, யாரோ ஒருவர் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த அந்த பெண், ஊடுருவிய நபரைக் கண்டு கூச்சலிட்டார், பின்னர் அவர் குளியறையை விட்டு வெளியேறினார்.

குற்ற உணர்ச்சியுடன் மாணவர் அந்த வீடியோக்களை நீக்கிவிட்டார். ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அதே குளியலறையில் சென்ற 22 வயது பெண்ணின் இரண்டு கிளிப்களை அவர் பதிவு செய்தார். அப்போது, அந்த இடத்திற்கு வந்த, கேம்பஸ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாணவரின் தொலைபேசியில் ஒரு தவறான வீடியோ இருப்பதைக் கண்டார்.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 18- ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ, குளியலறையில் இரண்டு பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு நேற்று முன்தினம் (19/07/2021) மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி ஷனாஸ் (District Judge Sharmila Sripathy- Shanaz) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டனை விவரத்தை வாசிக்கத் தொடங்கிய போது, அந்த மாணவர் தலையைத் தாழ்த்தினார். மாணவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மாணவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மாணவர் ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.