நவராத்திரி விழாவின் 8வது நாள்: ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அம்மன்!

Sri Moogambigai Alangaram
Photo: HEB

நவராத்திரி விழா, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில், வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உதிரி பூக்களைக் கட்டுவதற்கு ஆர்வம் காட்டிய சிங்கப்பூர் பெண்கள்!

அந்த வகையில், நவராத்திரி விழாவின் 8-வது நாளான நேற்று (அக்.21) ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

அதேபோல், அம்மன் உற்சவர் சிலைக்கு ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு

ஸ்ரீ சிவன் கோயிலில் உள்ள அம்மன் உற்சவர் சிலைக்கு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.