தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்.. மாதம் 5.6 லட்சம் என 25 ஆண்டுக்கு ஜாக்பாட் பரிசு

Tamil Nadu Man Wins Emirates Grand Jackpot

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் மிக மிக பிரம்மாண்ட தொகையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

49 வயதான மகேஷ் குமார் நடராஜன் என்ற அவர் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

எமிரேட்ஸ் டிராவின் FAST5 கிராண்ட் பரிசை அவர் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அவருக்கு 25 வருடத்திற்க்கு மாதம் 5.6 லட்சம் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அவர் தமிழ்நாட்டின் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எனது வாழ்க்கையிலும் படிக்கும் காலத்திலும் நான் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். எனது கல்வியை முடிக்க பலர் எனக்கு உதவினார்கள்” என்றார்.

“சமுதாயத்திற்கு நான் திரும்பக் கொடுக்க வேண்டிய நேரம் இது. சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு எனது பங்களிப்பை செய்வேன் ”என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் முக்கியமான வேலைகளில் ஆட்கள் பற்றாக்குறை

Verified by MonsterInsights