செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

missing coast Sentosa kayaker
Google Street View

செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று (அக்.22) காலை 10.25 மணியளவில் செந்தோசா தீவின் கடற்கரையில் காணாமல் போன படகோட்டி குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) தெரிவித்தனர்.

சிங்கப்பூரின் முக்கியமான வேலைகளில் ஆட்கள் பற்றாக்குறை

செந்தோசா தீவிலிருந்து கயாக் படகோட்டி காணாமல் போனதாக அதே நேரத்தில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கூறியது.

தேடுதல் பணிக்காக ரோந்துக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடலோர காவல்படை மற்றும் SCDF ஆகியவை முயற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.

அருகிலுள்ள கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, சுற்றுவட்டாரத்தில் அவரை கண்டால் தகவல் கொடுக்கவும் அது கோரிக்கை வைத்துள்ளது.

தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை காண சென்ற தம்பதி – தமிழர்கள் பாரம்பரியத்தில் போட்டோ எடுத்து மகிழ்வு