சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை காண சென்ற தம்பதி – தமிழர்கள் பாரம்பரியத்தில் போட்டோ எடுத்து மகிழ்வு

singaporean-couple-jallikattu-bulls tamilnadu
Tamil Media

ஜல்லிக்கட்டு காளைகளை காண வேண்டும் என்று சிங்கப்பூரில் இருந்த தமிழ்நாட்டு சென்ற தம்பதி காளைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதி “திருநல்லூர் ஜல்லிக்கட்டு” மிகவும் பிரபலமானது.

தடை இருந்தும் பதாகையை ஏந்திய ஆடவர் – போலீஸ் விசாரணை

அங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது, அப்பகுதியில் எங்கு ஜல்லிக்கட்டு காளை வாங்கினாலும் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வணங்கி செல்வது அவர்களது வழக்கம்.

இந்நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த லி யு செங், ஆ பை, டியோ இ சிங் ஆகியோர் திருநல்லூர் பகுதிக்கு வருகை தந்தனர்.

அங்கு சென்ற அவர்கள், தமிழர்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை மற்றும் துண்டு அணிந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகளை கண்டு மகிழ்ந்த அவர்கள் அதனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் காளைகள் வளர்ப்பு, போட்டியில் கலந்து கொள்வது உள்ளிட்டவை குறித்து உரிமையாளர்களிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

கூடுதலாக, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளில் வருகிறோம் என தேதியை குறித்து கொண்டு அவர்கள் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை: 130க்கும் மேற்பட்டோர் கைது