தடை இருந்தும் பதாகையை ஏந்திய ஆடவர் – போலீஸ் விசாரணை

sign conflict police investigation
Gilbert Goh/Instagram, right photo via Reddit Singapore

ஹாங் லிம் பூங்காவில் உள்ள பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை தொடர்பான பதாகையை ஏந்திய ஆடவரிடம் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) விசாரணை நடத்தி வருகிறது.

அந்த ஆடவர், கில்பர்ட் கோ (Gilbert Goh) என்ற சமூக ஆர்வலர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை: 130க்கும் மேற்பட்டோர் கைது

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை தொடர்பில் சிங்கப்பூரில் எந்தவித நிகழ்ச்சிகளோ அல்லது பொதுக் கூட்டங்களுக்கோ அனுமதி இல்லை என்பதை போலீசார் முன்னர் நினைவூட்டினர்.

அவ்வாறு இருக்கையில், கடந்த அக். 19ம் தேதி, இன்ஸ்டாகிராம் பதிவில், “Peace not war. Israel stop the killing at Gaza! Hamas release all the hostages!” என்ற வாக்கியம் அடங்கிய பதாகையுடன் இருக்கும் கறுப்பு-வெள்ளை புகைப்படத்தை கோ பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த பதாகை குறித்து அறிந்திருப்பதாக காவல்துறை கூறியது.

அதோடு வேறு சில தளத்திலும் புகைப்படம் பகிரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் வாங்கிய பெண்.. லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த ஆடவர்