பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் வாங்கிய பெண்.. லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த ஆடவர்

spore-auntie-begs-buy-lottery
Complaint Singapore/Facebook

ஜூ சியாட்டில் வயதான பெண் ஒருவர் தாம் பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் கேட்டுள்ளார்.

அப்போது ஆடவர் ஒருவர் அந்த பெண் பசியாக இருப்பதாக எண்ணி S$5 கொடுத்து உதவியுள்ளார்.

பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் வேறு பயணிகளுடன் மீண்டும் இந்தியா பறந்த இண்டிகோ விமானம்

பின்னர் அந்த ஆடவர், ஜூ சியாட் வளாகத்தில் உள்ள 7-லெவன் கடைக்கு சிகரெட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது யாசகம் வாங்கிய ​​அதே பெண்ணை அங்கு பார்த்து ஆச்சரியப்பட்டார்.

அதாவது, அந்த பெண் லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆடவர், நேற்று முன்தினம் (அக். 19) ஃபேஸ்புக் குழுவான Complaint Singapore இல் பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

லாட்டரிக்காக மற்றவர்களின் பணத்தை ஏமாற்றி வாங்கியதற்காக உண்மையிலேயே அந்த பெண் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அந்த பதிவில் பலர் அந்தப் பெண்ணுடனான தங்கள் அனுபவத்தை பகிர்ந்தனர்.

ஒருவர் கூறுகையில்; ஒருமுறை கெலாங்கில் அந்த பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது S$10 கொடுத்ததாகவும், அதே நாள் மாலை நேரத்தில் மீண்டும் அந்த பெண்ணை பெடோக்கில் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், பதிவிட்ட சிலர் அந்த ஆடவரை குறை கூறினர். நீங்கள் இரக்கத்துடன் பணத்தைக் கொடுத்ததாகவும், அந்தப் பெண் தன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமாக இருப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்தனர்.

ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற 40 பேர் செய்த சட்டவிரோத செயல்.. சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் – எச்சரிக்கை