நவராத்திரி விழா 2023- ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு!

நவராத்திரி விழா 2023- ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு!
Photo: HEB

 

நவராத்திரி விழாவையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடும் போலீசார் – தகவல் தருமாறு கோரிக்கை

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நவராத்திரி விழாவையொட்டி, சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 15- ஆம் தேதி ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரமும், அக்டோபர் 16- ஆம் தேதி அம்மனுக்கு அம்மன் சிவ பூஜையும், அக்டோபர் 17- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மஹா மாரியம்மன் அலங்காரமும், அக்டோபர் 18- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ கஜ லெக்ஷ்மி அலங்காரமும், அக்டோபர் 19- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ தனலெக்ஷ்மி அலங்காரமும், அக்டோபர் 20- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீநிவாஸ பெருமாள் அலமேலு மங்கை அலங்காரமும், அக்டோபர் 21- ஆம் தேதி ஸ்ரீ சாரதாம்பாள் அலங்காரமும், அக்டோபர் 22- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரமும், அக்டோபர் 23- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரமும், அக்டோபர் 24- ஆம் தேதி அம்மனுக்கு ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்

அதேபோல், நவராத்திரி விழாவையொட்டி, 10 நாட்களுக்கு கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 62595238 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.