நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள்: ‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Flyscoot Airlines), கோவை, சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்

நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால், இந்த வழித்தடத்திற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நடப்பு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா!

ஆரம்பக் கட்டணமாக ரூபாய் 9,265-ஐ ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.