மிகப்பெரிய அளவில் அமையும் சாங்கி விமான நிலையத்தில் Terminal 5 – சிங்கப்பூரர்களுக்கு அதிகரிக்க போகும் வேலைவாய்ப்புகள்

changi airport flights offers grand draw
Pic: Changi Airport/FB

Changi Terminal 5 : கோவிட்-19 தொற்றுநோயுடன் வாழ்வதற்கான மாற்றத்துடன், சாங்கி விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது.

சிங்கப்பூரின் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தில் வரவிருக்கும் மேம்பாடுகள் குறித்து 2022 தேசிய தின கூட்ட உரையில் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்தார்.

பெரிய மரம் விழுந்த சம்பவம்: விபத்தில் சிக்கிய அந்த 3 பேரின் நிலை என்ன?

தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டு காலம் இடைநிறுத்தத்திற்குப் பிறகு சாங்கி விமான நிலைய முனையம் 5 (T5) திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் லீ.

“இந்த மிகப்பெரிய முனையத்தின் பணிகள் வரும் 2030-களின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

மேலும், “அங்கு ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்க முடியும்” என்பதையும் பிரதமர் லீ சுட்டிக்காட்டினார்.

இது முனையம் 1 மற்றும் முனையம் 3ல் இருந்து சேவை பெறும் மொத்த பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று அவர் கூறினார்.

T5க்கு அருகில் Changi East Urban District என்ற பெயரில் ஒரு புதிய வட்டாரம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அங்கு சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

377A பிரிவு ரத்து செய்யப்படுவது என்பது “சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றுகிறோம் என்று அர்த்தமல்ல” – MCI