சிங்கப்பூரில் உயர்மாடிகளிலிருந்து குப்பை போட்ட 2,200 பேர் மீது நடவடிக்கை..!

NEA takes action against highrise litter
(Photo: GOV.SG)

சிங்கப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில், உயர்மாடிகளிலிருந்து குப்பை வீசிய 2,200 பேர் மீது தேசியச் சுற்றுப்புற அமைப்பு (NEA) நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 4 மால்களுக்கு COVID-19 பாதித்த நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்..!

ஒவ்வோர் ஆண்டும், அதாவது 2016ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை, சுமார் 1,100 முதல் 1,500 அமலாக்கச் சம்பவங்கள் இடம்பெற்றதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதில் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று குப்பை போடும் நபர்களுக்கு எதிராக சுமார் 6,000 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளில், அமலாக்க நடவடிக்கைகளின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குப்பைகளை உயர்மாடிகளிலிருந்து போடும் பழக்கத்தை ஒழிக்க, மற்ற அமைப்புகளுடனும் சமூகங்களுடனும் நெருங்கிச் செயல்பட அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source: Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பறவைகளுக்கு உணவு அளிப்போருக்கு கடுமையான அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…