சிங்கப்பூரில் பறவைகளுக்கு உணவு அளிப்போருக்கு கடுமையான அபராதம்..!

(PHOTO: Wikimedia Commons)

சிங்கப்பூரில் பறவைகளுக்கு, சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்கள் உணவளிக்காமல் இருக்க, தேசியப் பூங்காக் கழகம் (NParks) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த ஆண்டில் மட்டும் பறவைகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக உணவளித்த 31 பேருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சோப்பில் மறைத்து வைத்து கடத்திய தங்கம் பறிமுதல்..!

இது குறித்து கண்காணிக்க, தேசியப் பூங்காக் கழகம் கேமராக்களை பொருத்தியுள்ளது. பறவைகளுக்கு அதிகம் உணவு அளிக்கப்படும் இடங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேம்படுத்தப்பட்ட வனவிலங்குச் சட்டம் கடந்த ஜூன் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

அந்த சட்டத்தின்படி, சட்டவிரோதமாக வனவிலங்குகளுக்கு (பறவைகளையும் சேர்த்து) உணவளிக்கும் நபர்களுக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் Pigeon Management Plan என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில், சில நகர மன்றங்களுடன் இணைந்து NParks தொடங்கியது என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் மீண்டும் தொற்று…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…