கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் மீண்டும் தொற்று…!

Photo: Nuria Ling/TODAY

Singapore NEW CLUSTER COVID-19 : சிங்கப்பூரில் நேற்றைய (ஆகஸ்ட் 04) நிலவரப்படி, புதிதாக 40 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது

இதில் பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 100 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து – மனிதவள அமைச்சர்..!

புதிய குழுமம்:

அண்மைய வாரங்களாக, முன்னர் இந்த கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில சிங்கப்பூர் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

3 கியான் டெக் லேனில் உள்ள ப்ளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியில் (Blue Stars Dormitory) ஒரு புதிய நோய் பரவல் குழுமம் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 33 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அந்த விடுதியுடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி ப்ளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியில் COVID-19 கிருமி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

முன்னர், அட்மிரால்டி ரோடு வெஸ்டில் உள்ள Cochrane Lodge II மற்றும் Toh Guan ரோடு ஈஸ்ட்டில் உள்ள Westlite Toh Guan dormitory தங்கும் விடுதியில் புதிய நோய் பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (செப்டம்பர் 3) தெரிவித்தது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…