கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்…!

New COVID-19 clusters reported at 2 dormitories previously cleared of the disease
(Roslan Rahman / AFP/Getty Images)

சிங்கப்பூரில் முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 கிருமித்தொற்று குழுமம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அட்மிரால்டி ரோடு வெஸ்டில் உள்ள Cochrane Lodge II மற்றும் Toh Guan ரோடு ஈஸ்ட்டில் உள்ள Westlite Toh Guan dormitory தங்கும் விடுதியில் புதிய நோய் பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (செப்டம்பர் 3) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களுக்கு நோய்த்தொற்று..!

நேற்றைய நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 41 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 22 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Westlite Toh Guan dormitory தங்கும் விடுதியில், புதிய 8 சம்பவங்கள் முந்தைய 10 சம்பவங்களுடன் தொடர்புடையதாக MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், Cochrane Lodge II தங்கும் விடுதியுடன் முந்தைய 14 சம்பவங்கள் தொடர்புடையதாகவும் MOH தெரிவித்துள்ளது.

சுங்கே தெங்கா லாட்ஜ், ஹோம்ஸ்டே லாட்ஜ், துவாஸ் வியூ தங்கும் விடுதி ஆகிய விடுதிகளில் புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்கு முன்னர், Toh Guan Dormitory, Changi Lodge II மற்றும் North Coast Lodge ஆகிய 3 இடங்களில் புதிய பாதிப்புகளை சுகாதார அமைச்சகம் (MOH) அடையாளம் கண்டது.

நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, 10 கூடுதல் பாதிப்புகள் ஹோம்ஸ்டே லாட்ஜுடன் தொடர்புடையதாக MOH அறிவித்துள்ளது. தற்போது வரை, மொத்தம் 17 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல, ஒரு சம்பவம் Toh Guan தங்கும் விடுதியுடன் தொடர்புடையது, அங்கு மொத்தம் எட்டு சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மற்றொரு சம்பவம் துவாஸ் வியூ தங்கும் விடுதியுடன் தொடர்புடையது, அங்கும் மொத்தம் எட்டு சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…