சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

Shops in Suntec City and NEX among places visited by COVID-19 cases during infectious period
(PHOTO: Facebook/NEX Singapore)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் புதிதாக சில இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.

புதிய இடங்களின் பட்டியலில், உணவகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக MOH தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஆசியாவிலேயே மிகவும் புதுமைமிக்க நாடாக சிங்கப்பூர் முதலிடம்..!

கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள், சன்டெக் சிட்டி மாலில் உள்ள ஓர் உணவகத்திற்கு ஆகஸ்ட் 29 அன்று இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்றுள்ளனர்.

NEX மாலில் உள்ள ஓர் அழகுப் பராமரிப்பு நிலையத்திற்கு (Perky Lash) ஆகஸ்ட் 26 அன்று மதியம் 1.05 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சென்றுவந்துள்ளனர்.

அதே போல, VivoCity -ல் உள்ள கோப்பிட்டியம் (Kopitiam) உணவங்காடியும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

(Photo: MOH)

குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்படும் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.

துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் வேலை அனுமதி திட்டங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…