இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களுக்கு நோய்த்தொற்று..!

All five imported cases were placed on stay-home notice upon arrival in Singapore
All five imported cases were placed on stay-home notice upon arrival in Singapore

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பீன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 5 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

அவர்களில் இரண்டு சிங்கப்பூரர்கள் அடங்குவர், அதாவது ஆகஸ்ட் 31 அன்று பங்களாதேஷில் இருந்து 37 வயது பெண் மற்றும் ஆகஸ்ட் 22 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 47 வயது ஆடவர் ஆகியோர் அடங்குவர்.

அதே போல, 49 வயதான நிரந்தரவாசி ஒருவர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளார்.

அந்த 5 பேரும் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவ்வேளையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய நிலவரப்படி, தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 41 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 22 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் வேலை அனுமதி திட்டங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…