சிங்கப்பூரில் சுமார் 100 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து – மனிதவள அமைச்சர்..!

discriminatory hiring practices
(Photo: Ministry of Communications and Information)

சிங்கப்பூரில் சுமார் 100 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியுள்ளார்.

அதாவது நியாயமற்ற முறையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஸ்காட்லாந்தில் சிக்கிக்கொண்ட சிங்கப்பூர் மாணவி – COVID-19 சிகிச்சைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபாடு..!

நாடாளுமன்றத்தில் ஐந்தாவது நாளில் திருமதி தியோ பேசினார். அப்போது, நியாயமற்ற முறையில் ஆட்சேர்ப்பு குறித்த பட்டியலில் உள்ள நிறுவனங்கள் பெயர்களை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) பற்றிய கேள்விகளை எழுப்பினர்.

மனிதவள அமைச்சகம், நியாயமான பரிசீலனை குறித்த கட்டமைப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல், செலவை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சுமார் 850 முதலாளிகளுடன், TAFEP நியாய வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்பு வழிகாட்டுதல் அமைப்பு பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் சுமார் 40 சதவீதம் பேர் அந்த நடவடிக்கைகளை மறுஆய்வு செய்து, பின்னர் ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பள ஆதரவு வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், ஊழியர்களின் சுமார் 1000 புகார்களுக்கு சமரசம் செய்து வைத்ததாக திருமதி தியோ கூறினார் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 2 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…