சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சோப்பில் மறைத்து வைத்து கடத்திய தங்கம் பறிமுதல்..!

Rs.38 lakh worth gold seized in Trichy airport
Rs.38 lakh worth gold seized in Trichy airport

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில், சோப்பில் மறைத்து கடத்தி கொண்டுவரப்பட்ட இந்திய மதிப்பில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது, அதனால் சர்வதேச விமானங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்ட் ஈரச் சந்தையில் கடைக்குத் தீ வைத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை..!

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துவர வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்

அதனைத் தொடர்ந்து, அதில் புதுக்கோட்டையை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது அவரின் பெட்டியில் இருந்த சோப்பு பண்டலில் தங்க செயின்கள் மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இதையும் படிங்க : மருத்துவ பரிசோதனை காலக்கெடு… இன்னும் 16,000 ஊழியர்கள் பதியவில்லை..!

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 738 கிராம் என்றும், அதன் மொத்த மதிப்பு ரூபாய் 38 லட்சம் (இந்திய மதிப்பில்) ஆகும் என்றும் தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தங்கத்தை கடத்தி வந்த ரங்கசாமியை அதிகாரிகள் கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் மீண்டும் தொற்று…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…