சிங்கப்பூர் ஜூரோங் வெஸ்ட் ஈரச் சந்தையில் கடைக்குத் தீ வைத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை..!

2 years jail for man who set fire to Jurong West market stall
2 years jail for man who set fire to Jurong West market stall (Cullan Smith/Unsplash)

ஜூரோங் வெஸ்ட் ஈரச் சந்தையில் கடை வைத்திருந்த ஒருவர் தொடர்ச்சியாக கொடுமைப்படுத்துதலுக்கு ஆளானதை தொடர்ந்து, தன்னுடைய நண்பருக்காகப் பழிவாங்கும் நோக்கில் மற்றொரு கடைக்குத் தீ வைத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் அவரது நண்பருக்குக்காக பழிவாங்கும் நோக்கில், ஆங் சின் டாங் (Ang Chin Tang) என்பவர், திரு பெ ஆ ஹோக்கின் (Peh Ah Hock) கடை மற்றும் லாரிகளுக்கு தீ வைத்தார்.

இதையும் படிங்க : மருத்துவ பரிசோதனை காலக்கெடு… இன்னும் 16,000 ஊழியர்கள் பதியவில்லை..!

அதனை தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு ஆங் மலேசியாவுக்கு தப்பி ஓடினார். அவர் மூன்றரை ஆண்டுகள் அங்கேயே இருந்துள்ளார், ஜனவரி மாதம் சிங்கப்பூர் திரும்பியபோது அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4), கர்மா பாதுகாப்பு மற்றும் தனியார் விசாரணை சேவைகளின் முன்னாள் இயக்குநரான ஆங்-க்கு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

68 வயதான அவர், மூன்று முறை தீ விபத்து மற்றும் கடை திருட்டு தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து இரண்டு பேனாக்களை திருடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதேபோன்ற மூன்று குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன.

தீ மூட்டிய குற்றத்திற்காக அவருக்கு, 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் மீண்டும் தொற்று…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…