மருத்துவ பரிசோதனை காலக்கெடு… இன்னும் 16,000 ஊழியர்கள் பதியவில்லை..!

(PHOTO: Reuters / Edgar Su)

சிங்கப்பூரில் இன்று (செப்., 5) ஊழியர்களுக்கு பரிசோதனை காலக்கெடு நாள் ஆகும், ஆனால் இன்னும் 16,000 ஊழியர்கள் COVID-19 தொற்றுக்கான கட்டாய வழக்கமான சோதனை பதிவு குறித்த பட்டியலிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறிய ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியாது என்று மனிதவள அமைச்சகம் (MOM), கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), பொருளியல் வளர்ச்சிக் கழகம் (EDB) மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) ஆகிய அமைச்சுகள் கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் மீண்டும் தொற்று…!

யாருக்கு இந்த காலக்கெடு?

இந்த கிருமித்தொற்று சூழ்நிலையில், வேலைகள் பாதுகாப்பாக மறுதொடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள், கட்டுமான, கடல் மற்றும் உற்பத்தி துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணித் தளங்களுக்குச் செல்லும் பணியாளர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கிருமித்தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இந்த வழக்கமான சோதனை ஒரு முக்கியமான பகுதியாகும். முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பாதிப்புகளை கண்டறிவதில் இந்த சோதனை முறை உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சோதனை செய்த ஊழியர்களுக்கு இன்று (செப்டம்பர் 5) மீண்டும் மருத்துவச் சோதனை மேற்கொள்ளப்படும்.

பதிவு முறை:

ஒருமுறை Swab பதிவு முறையின் கீழ் ஊழியர்கள் பதிவுசெய்தால் போதும், எதிர்கால வழக்கமான சோதனை குறித்த புதிய தேதிகள் அவர்களுக்கு தானாகவே ஒதுக்கப்படும்.

எனவே, முதலாளிகள் இதில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டால், வேலை அனுமதி அட்டை தொடர்பான சலுகைகள் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டு ஆணையத்தின் Swab Registration System (SRS) என்னும் பதிவு முறையின் கீழ், மேற்குறிப்பிடப்பட்ட ஊழியர்கள் உடனடியாகப் பதிந்துகொள்ளும்படி அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 100 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து – மனிதவள அமைச்சர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…