வூஹான் வைரஸ்; தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஆலோசனை..!

New advisory on the wuhan coronavirus in 4 languages including Tamil

சீனாவில் உருவாகியுள்ள கோரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது, சிங்கப்பூரில் மொத்தம் 10 பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (ஜன. 29) உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் தமிழ், ஆங்கிலம், சீன, மலாய் ஆகிய நான்கு மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 2 புதிய நபர்களுக்கு வூஹான் வைரஸ்; மொத்த எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..!

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் “சிங்கப்பூரர்கள் அமைதியாகவும், கவனமாகவும் இருக்க” கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்; “அமைதியாகவும் ஆனால் கவனமாகவும் இருக்க வேண்டும்” – பிரதமர் லீ…!

மேலும், “நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் 2003ல் SARS வைரஸை கையாண்டதிலிருந்து, இதுபோன்ற இக்கட்டான நிலைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்” என்றார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டின் சுகாதாரத்துறை இந்த வூஹான் வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும், புதிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.