புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிறுவனங்களில் எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நிறுவனம், பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் இந்நிறுவனத்தின் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.

S Pass, EP தகுதிச் சம்பள உயர்வு…. உள்ளூர் ஊழியர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமா?

இந்த நிலையில், எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மார்ச் 13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பேருந்து சேவை 101, புளோக் 991A- க்கு வெளியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிறுத்தத்தில் (பேருந்து நிறுத்தம் 66601) சேவை வழங்கும். பேருந்து சேவைகள் 114, 329 ஆகியன, புவாங்கோக் கிரசன்ட்டில் (Buangkok Crescent) புளோக் 991A- க்கு எதிர்ப்பக்கத்தில் அமைந்துள்ள புதிய பேருந்து நிறுத்தத்தில் (பேருந்து நிறுத்தம் 66609) சேவை வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயங்கி கீழே விழுந்த 25 வயது தேசிய ஆயுதப் படை சேவையாளர் மரணம்

இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.