S Pass, EP தகுதிச் சம்பள உயர்வு…. உள்ளூர் ஊழியர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமா?

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

Employment Pass, S Pass வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது குறித்த செய்திகளை நாம் அறிந்திருப்போம்.

இந்நிலையில், இந்த சம்பள உயர்வு உள்ளூர் நிபுணர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமா என்றால் அது போதுமானது அல்ல என்று தேசியத் தொழில் சங்க காங்கிரஸின் துணைத் தலைமை செயலாளர் பாட்ரிக் டே தெரிவித்தார்.

‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர், Employment Pass கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

இதனால், உள்ளூர் ஊழியர்கள் இல்லாத வேலை இடங்களை வெளிநாட்டு ஊழியர்களால் நிரப்புவதை உறுதி செய்ய முடியும் என்றார்.

“ஒரு நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் வேலை செய்வது கவனத்தில் கொள்ளப்படும்.”

Employment Pass மற்றும் S Pass வைத்திருப்பவர்களுக்கான தகுதி சம்பள உயர்வுவானது வரும் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய மாற்றங்கள் மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் புதிய EP மற்றும் S Pass விண்ணப்பதாரர்களுக்கான தகுதிச் சம்பளம் S$500 உயரும்.

நிதிச் சேவைத் துறையில், புதிய EP விண்ணப்பதாரர்களுக்கு தகுதிச் சம்பளம் S$5,000 இல் இருந்து S$5,500 ஆக உயர்த்தப்படும். இந்தத் துறையில் உள்வரும் S Pass வைத்திருப்பவர்களுக்கு S$3,500 சம்பளம் அறிமுகப்படுத்தப்படும்.

பழைய EP மற்றும் S Pass விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் அதிக சம்பள கட்-ஆஃப்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயர்த்தப்படும். அவர்கள் இதற்கு புதுப்பித்த ஒரு வருடம் கழித்து, அதாவது செப்டம்பர் 2023 முதல் உயரும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!