சிங்கப்பூரில் புதிதாக 1,012 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Coronavirus confirmed for worker

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000- ஐ கடந்தது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (19/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் நேற்று மட்டும் புதிதாக 1,009 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் சுமார் 1,012 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட்-19 சுயபரிசோதனை கருவியைப் பெற, 100 இயந்திரங்கள் அமைக்கப்பட்டது!

சமூக அளவில் 919 பேரும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 321 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,804 ஆக உயர்ந்தது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 873 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 118 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 21 பேர் காவலிக்கிடமான் நிலையில் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று பாதிப்பு; உணவகத்தை மூட உத்தரவு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்; அவசரத் தேவைக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வரும் வாரங்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா பாதிப்பு வரும் வாரங்களில் உச்சத்தைத் தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றன. இதனிடையே, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.