ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று பாதிப்பு; உணவகத்தை மூட உத்தரவு.!

Ayer Rajah Foodcentre closed
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள ஆயர் ராஜா (Ayer Rajah) உணவகத்தில் COVID-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆயர் ராஜா உணவகத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டதையடுத்து, சுத்திகரிப்பு பணிகளுக்காக இன்று (செப்டம்பர் 19) முதல் செப்டம்பர் 22 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toa Payoh Lorong-ல் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

பிளாக் 503, வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் (Blk 503 West Coast Drive) உள்ள உணவங்காடிக்காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான பரிசோதனைகளில் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்குள்ள கடைக்காரர்கள், துப்பரவாளர்கள் சிலருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாத அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிளாக் 210, Toa Payoh Lorong 8-ல் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் மையத்தில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் 3D வரைபடத்தைப் பயன்படுத்த நிறுவனங்கள் விருப்பம்!