Toa Payoh Lorong-ல் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் மையம் தற்காலிமாக மூடல்.!

Toa Payoh Lorong closed
Pic: Google Maps

பிளாக் 210, Toa Payoh Lorong 8-ல் உள்ள சந்தை மற்றும் ஹாக்கர் மையத்தில் கிருமிநீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலி மாக மூடப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுச் சூழல் நிறுவனம் (NEA) நேற்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளது.

பிளாக் 210-ல் உள்ள சந்தையும், ஹாக்கர் மையமும் தீவிர சுத்திகரிப்புப் பணிகளுக்காக 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் இரண்டு நோய்த்தொற்று குழுமங்கள் அடையாளம்!

அங்குள்ள கடைக்காரர்கள், ஊழியர்கள் ஆகியோரிடையே கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், அனைத்து சந்தைகளிலும் TraceTogether செக்-இன் செய்து, தொடர்பு தடமறிதலை எளிதாக்க வேண்டும் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் 90 வயது முதியவர் உயிரிழப்பு!