கொரோனா பாதிப்பால் 90 வயது முதியவர் உயிரிழப்பு!

Bangladesh man had visited Mustafa Centre
Before being admitted to hospital Bangladesh man had visited Mustafa Centre

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது பொது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

உலகில் மிக வேகமான அகண்ட அலைவரிசை வேகத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூர்!

அதேபோல், கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 88%-யை அதிகரித்துள்ள நிலையில், முதியவர்களில் ஒரு சிலர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தடுப்பூசித் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (18/09/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் (National Centre for Infectious Diseases) சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வீட்டில் இருந்தவாறு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடையும் திட்டம்… திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதிப் பெறுவர்?

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. உயிரிழந்த முதியவருக்கு புற்றுநோய் போன்ற இணைநோய்கள் இருந்தன; மேலும், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக் கூட போட்டுக் கொள்ளவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக, கொரோனா பாதிப்பால் முதியவர்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.