வீட்டில் இருந்தவாறு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடையும் திட்டம்… திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதிப் பெறுவர்?

 

கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், வீட்டில் இருந்தவாறு கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடையும் திட்டத்தை 12 வயதில் இருந்து 50 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியிருந்தது. இந்த திட்டத்தை 69 வயது வரை உள்ளவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று (18/09/2021) முதல் அமலுக்கு வந்தது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று – தங்கும் விடுதியில் 96 பேர் புதிததாக பாதிப்பு

இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதிப் பெறுவர்?

கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட 12 வயதில் இருந்து 69 வயது வரை உள்ளவர்கள், மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடையலாம். நோய்த்தொற்றில் இருந்து கடுமையாகப் பாதிக்கப்படாதவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

அதிக கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு என்ன?

வீடுகளில் தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். அறையோடு கழிப்பறை வசதி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், வீட்டில் 80 வயதுக்கு மேலானவர்களோ, கர்ப்பிணிகளோ நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களோ இருக்கக் கூடாது. விரிவுபடுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், கொரோனா நோய்த்தொற்று உறுதியான, திட்டத்திற்குத் தகுதி பெறுபவர்கள் உடனடியாக வீட்டில் குணமடைவதைத் தொடங்கலாம். அவர்கள் மருத்துவமனைக்கோ சமூகப் பராமரிப்பு நிலையத்திற்கோ செல்லத் தேவையில்லை. முழுமையாகத் தடுப்பூசிப் போட்ட 597 பேர் வீட்டிலிருந்து குணமடையும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அவ்வப்போது, உடல் வெப்பநிலை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை சுயமாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.