சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று – தங்கும் விடுதியில் 96 பேர் புதிததாக பாதிப்பு

COVID-19 cases Singapore rise
Photo: TODAY

சிங்கப்பூரில் நேற்று (செப். 17) புதிதாக 934 பேருக்கு உள்ளூர் அளவில் கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அவற்றில் தங்கும் விடுதியில் வசிக்கும் 96 பேர் புதிததாக பாதிக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதிக கிருமித்தொற்று ஆபத்துள்ள நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு என்ன?

மேலும், சமூக அளவில் 838 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 241 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

கியான் டெக் டிரைவ் (Kian Teck Drive) தங்கும் விடுதியில் வசிக்கும் 38 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, புதிய நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ப்ளூ ஸ்டார்ஸ் தங்கும் விடுதியில் மொத்தம் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவெரி லாட்ஜ் தங்கும் விடுதியில் மொத்தம் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் பதிவான மொத்த (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்) நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 935ஆக உள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு