சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை!

Photo: IndiGO Official Twitter Page

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 1,260 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் திறந்து வைத்தார். சுமார் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி கவலை இல்லை.. DPM வோங் அளித்த உறுதி

அதைத் தொடர்ந்து, புதிய முனையத்தின் ஓடுபாதையில் விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பின்னர், அந்த விமான முனையத்தில் விமானங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றனர்.

Photo: Chennai Airport

அந்த வகையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Indigo Airlines) சொந்தமான 6E 1003, 6E 1025 என்ற விமானங்கள், புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் ஓடுபாதையில் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினமும் நேரடியாக இயக்கப்பட்டு வருகிறது.

டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள், புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பார்த்து வியப்படைந்தனர். மேலும், முனையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்துவிட்டு செல்கின்றனர்.