COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியல்.!

new locations visited infectious
Pic: Hungrygowhere & wheretogo.pro

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Funan Mall, Sim Lim Square, Jurong Point உள்ளிட்ட மால்கள் பொது இடங்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களின் பட்டியல்:

  • Jurong Point (ஜூன் 14)
  • Tiong Bahru Plaza (ஜூன் 16, 17)
  • Sim Lim Square (ஜூன் 17)
  • 166 புக்கிட் மேரா சென்ட்ரலில் உள்ள NTUC FairPrice பேரங்காடி (ஜூன் 17)
  • VivoCity (ஜூன் 18)
  • 107 North Bridge சாலையில் உள்ள Funan மால் (ஜூன் 18 )
  • ரெட்ஹில் சந்தை (Redhill Market) (ஜூன் 19, 20, 21)
Table: MOH

மேலே குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று வந்தோர் 14 நாட்கள் தங்கள் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த இடங்களை பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும், அங்கு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தொற்று பாதிப்பு உறுதியான நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பயண விவரம் பற்றி பொய்யான தகவல் அளித்தவருக்கு மூன்று வாரச் சிறை!