கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள Work permit உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய தகவல்

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் நிலவும் மனிதவள சவால்களை எளிமைப்படுத்த உதவும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (அக் 30) ​​தெரிவித்தது.

தற்போது, ​​ஊழியரின் அனுமதி காலாவதியாகும் 21 முதல் 40 நாட்களுக்குள், அவரது முதலாளியின் அனுமதியின்றி work permit அனுமதி வைத்திருப்பவர்களை வேறு முதலாளிகள் (நிறுவனங்கள்) வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் குழந்தைகளை பாலியல் ரீதியாக குறிவைக்கும் கும்பல் – சந்தேகத்தில் 22 ஆண்கள் கைது

இனி, வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது work permit அனுமதி காலாவதியாகும் வரை அவர்களது முதலாளியிடம் (நிறுவனத்தில்) வேலையில் இருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, ஊழியருக்கும் அவரது முதலாளிக்கும் இடையே உள்ள பரஸ்பர ஒப்பந்தத்திற்கு உட்பட்டு வேண்டுமானால் அவர்கள் 30 நாட்களுக்கு தங்கள் work permit அனுமதியை நீட்டிக்கலாம்.

முதலில் வேலைசெய்த முதலாளியின் அனுமதியின்றி, வேறொரு இடத்தில் வேலையை தேட அவர்கள் அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில், 30 நாட்கள் வரை ஊழியரை அதே வேலையில் முதலாளிகள் வைத்திருக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலை ஒப்பந்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க ஊழியர் அல்லது முதலாளியிடம் உடன்பாடு இல்லை என்றால், ஊழியர் தக்கவைப்பு திட்டங்களில் (Retention schemes) அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மேலும், 30 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் அவர்களை சேர்க்க தொழில் சங்கங்கள் வழிவகை செய்யும் என்று MOM கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக 500 பேர் பாதிப்பு – முழு விவரம்