புதிய ஒமைக்ரான் வகைகள் கண்டுபிடிப்பு… பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

People seen walking along Orchard Road in Singapore on Mar 29, 2022. (Photo: CNA

புதிய ஒமைக்ரான் துணை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், தொற்றை ஏற்படுத்தும் கிருமித் தொடர்ந்து உருமாற்றம் அடைத்துக்கொண்டு இருக்கும் என்பது தெரிந்தது தான் என்றும் அமைச்சர் ஓங் கூறினார்.

சைனாடவுனில் முதியவர் ஒருவரின் தலையில் பீர் பாட்டிலை வைத்து அடித்து நொறுக்கிய ஆடவர் கைது

சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் BA.4 மற்றும் BA.5 துணை வகைகளின் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதை திரு ஓங் சுட்டிக்காட்டினார்.

விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் இருந்து கிடைத்த தரவு மற்றும் கண்டுபிடிப்புகளிலிருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால், BA.4 மற்றும் BA.5 ஆகியவை BA.1 மற்றும் BA.2 ஐ விட அதிகம் பரவக்கூடியவை என்றார்.

ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுவரை BA.4 மற்றும் BA.5 மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியருக்கு செக்.. S$6,500 அபராதம் – இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்!